About St. Antony's Shrine Avadi

ஆவடி புனித அந்தோணியார் திருத்தலம் வரலற்றுச் சுருக்கம்

'சூரியன் எப்போதுமே மறையாத முடியரசு Empire there Sun never sets) என்று பெருமிதத்தோடு இருந்த அன்றைய ஆங்கில அரசு ஆவடியை தனது முப்படையின் பாசறையாகவும், இராணுவத் தளவாடமாகவும். பயன்படுத்தி வந்ததால் Armed Vehicles and Ammunitiகத்தோலிக்க மக்கள் தொகை அதிகமாகவே வழிபாட்டுக்கு Tipot of Indil என்பதின் பெயர் சுருக்கமே ஆவடி(AVADI என்று காரணப் பெயராக வைத்தனர்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பே ஆவடியிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளான சேக்காடு, கவரப்பாளையம், வீராபுரம், மோரை, அலமாதி போன்ற ஊர்களில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டிருந்தது. ஆனால் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. எனவே முனைத்த கிறிஸ்துவம் வேறுான்றவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலக்கட்டத்தின் இறுதியில் இரண்டாம் உலகப்போரும் நடந்து கொண்டிருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் (1939. 45)ஆவடி, வீராபுரம், மோரை, அலமாதி போன்ற பகுதிகள் கைதிகள் தங்கும் முகாமாக இருந்தது. காலப்போக்கில் அவ்வூர்கள் பாதுகாப்புப் படையினர் (Military Personnel) வசிக்கும் இடமாக அமைந்துவிட்டது.

பாதுகாப்புத் துறையில் பணிசெய்த கிறிஸ்தவ படைவீரர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்ய மிலிட்டரி சாப்ளின் (Military Chaplain) என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவ குருக்கள் நியமிக்கப்பட்டிருந் தனர். அவர்களுக்குப் பாதுகாப்புத் துறையினரால் மாதச் சம்பளமும், இராணுவ விடுதியிலிருந்து (Mess) உணவும் வழங்கப்பட்டது. இன்று HVF ல் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம், முன்னாளில் Garrison Church என்று அழைக்கப்பட்டது. இந்த ஆலயம் இருக்கும் இடம் அப்பொழுது ஒரு அரிசி ஆலையாக தனியாருக்குச் சொந்தமாக இருந்தது. கையகப்படுத்தி அதை ஆங்கில அரசு முன் பகுதியை கிறிஸ்துவ ஆலயமாகவும், பின் பகுதியை குருக்கள் தங்கும். இடமாகவும் பயன்படுத்தினர்.